Ticker

6/recent/ticker-posts

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட்டால் விஷமாக மாறும் 07 உணவுகள்.

குளிர்சாதனப் பெட்டியில் சில உணவுப்பொருட்களை வைப்பது நல்லதல்ல.  பலர் காய்கறிகளில் பாதி பயன்படுத்திய பின்னர் மீதியை பிரிட்ஜில் வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். 

தற்போது உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், குளிர் சாதனப் பெட்டியில் சில உணவுப் பொருட்களை வைப்பது நல்லதல்ல. பலர் காய்கறிகளை பாதி பயன்படுத்தி விட்டு மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கினன்றனர். இதுவும் ஆபத்தானது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நஞ்சை உண்டாக்கும் 07 உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

தக்காளி : 

தக்காளியை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. ஜெர்மனியிலுள்ள Göttingen என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கூற்றுப்படி, தக்காளியில் 'லைகோபீன்' உள்ளது. மேலும், இதில் உள்ள கரோட்டினாய்டு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. தக்காளியை குளிரூட்டுகின்ற போது லைகோபீனின் கட்டமைப்பை மாற்றி, அது டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகின்றது. இந்த டொமடைன் கிளைகோல்காய்டு உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை எப்போதும்  வெளியிலேயே வைக்க வேண்டும்.


உருளைக்கிழங்கு : 

உருளைக்கிழங்கை ஒருபோதும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது. பாதியாக வெட்டிய உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது தவறாகும்.  குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, உருளைக்கிழங்கிலுள்ள மாவுச்சத்து சர்க்கரையாக மாறும், இது ஆரோக்கியத்திற்கு கெடுதி விளைவிக்கும். மேலும், உருளைக்கிழங்கு குளிர்சாதனப் பெட்டியில் இருந்தால் முளைக்க தொடங்கி விடும் என்பதால் வெளியே காற்றோற்றமாகவும், ஈரப்பதம் குறைவாகவும் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.


வெங்காயம் : 

பலரும் வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார்கள். வெங்காயத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன் மூலம், அங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. இந்த வெங்காயத்தை சாப்பிடுவது எமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் குளிர்சாதனப் பெட்டியிலுள்ள குளிர்ச்சியின் காரணமாக, வெங்காயத்திலுள்ள நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக வெங்காயம் மிக விரைவாக கெட்டு விடும்.


பூண்டு

பூண்டை தோலுரித்து குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. குளிர்ந்த வெப்ப நிலையிலுள்ள பூண்டில் இருந்து வேர்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதன் தன்மை மாறி, குளிரில் பூண்டின் தரம் குறைவதால், அதன் சுவையும் குறைகின்றது. நீங்கள் பூண்டை சேமிக்க விரும்பினால்,உரித்த பூண்டை காற்று புகாத பாத்திரத்தில் அல்லது போத்தலில் இடைத்து உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். பூண்டு 02 - 03 நாட்களுக்கு பொலிவாகவே இருக்கும்.



வாழைப்பழங்கள் : 

வாழைப்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் குறைக்கலாம், வாழைப்பழங்களை உலர்ந்த மற்றும் காற்றோட்டமாக இருக்கும் இடத்திலேயே வைக்க வேண்டும். வாழைப்பழங்களை காற்றோட்டமாக வைத்திருந்தாலே போதும் அவை அழுகாமல் அப்படியே இருக்கும். குளிர்சாதனப் பெட்டியிலோ, பையிலோ  வைத்தால் 02 நாட்களுக்கு பின்னர் அழுக தொடங்கி விடும்.


தேன் : 

தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் வைத்தால் தேன் விரைவில் கேட்டு போய்விடும். குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, தேனில் உள்ள நீர் உறைந்து, அதன் தரம் மோசமடைகின்றது. தேனில் உள்ள நொதிகள் குளிரூட்டல் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது. இது தேனில் நொதித்தல் தன்மையை ஏற்படுத்தும். இதனால் சுவை, தரம் மாறி விடும் என்பதோடு உடலக்கு தேவையான பலனை தராது. 


ரொட்டி : 

குளிர்சாதனப் பெட்டியில் ரொட்டியை வைத்தால் அதன் தன்மை மாறி விடும். அதாவது, மொறுமொறுப்பு தன்மை மாறி ரொட்டி நமத்து விடும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் ரொட்டியை வைப்பதால் அதில் பூஞ்சை உண்டாகி, விரைவில் கெட்டு விடும். இவ்வாறான உணவு உடலக்கு கேடானதாகும். எனவே, ரொட்டியை காற்று புகாத கொள்கலனில் சேமித்தால் போதுமானது. 



Post a Comment

0 Comments