Ticker

6/recent/ticker-posts

மாணவ மாணவிகளுக்கான அகில இலங்கை ரீதியான கட்டுரைப் போட்டி - 2024

தெஹிவளை வடக்கு சிங்க சமாஜம் வருடம் தோறும் நடாத்தும் போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான நாடளாவிய ரீதியான கட்டுரைப் போட்டி. 

போட்டி விபரங்கள்:

01.  இப்போட்டியில் 15 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவ, மாணவிகளும் பங்கேற்க முடியும்.

02. ஆக்கங்கள் தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

03. போட்டிக்கான தலைப்பு "போதைப் பொருள் துஷ்பிரயோகம்" - "குணப்படுத்த போராடுவதை விட சிறந்த வழி வருமுன் காப்பதே சிறந்தது" (DRUG ABUSE PRE- VENTION IS BETTER THAN CURE)

04. மும்மொழிகளிலும் தனித்தனியாக முதல் 05 இடங்களைப் பெறும் போட்டியாளர்களுக்கு 15,000/-, -12,500/, 10,000/-, 7,500/-, 5,000/= என பணப் பரிசில்களும், அழகிய பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

05. கட்டுரைகள் அனுப்ப வேஎண்டிய முகவரி: 

முகவரி தமிழில்:
போட்டி ஒருங்கிணைப்பாளர்
12/3, பிரான்சிஸ் வீதி,
வெள்ளவத்தை, 
கொழும்பு - 06 

முகவரி ஆங்கிலத்தில்:
Project Chairman,
12/3, Frances Road,
Wellawatte, 
Colombo-06

06. முடிவுத் திகதி: 2024 ஒக்டோபர் 30
  

07. கையெழுத்துப் பிரதிகளாயின் A4 அளவு தாளில் 05 பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் (தட்டச்சு பிரதிகளாயின் 04 பக்கங்கள்). தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்படல் வேண்டும். 

08. அனுப்பப்படும் ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்த ஆக்கம் எனவும் அவருடைய பெயர், பிறந்த திகதி, வகுப்பு ஆகிய விபரங்களும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

09. பங்குபற்றும் மாணவ மாணவிகள் தங்களது பெயர், பாடசாலையின் பெயர். சொந்த விலாசம், தொலைபேசி ஆகியவற்றை ஆங்கிலத்தில் (IN BLOCK LETTERS) தெளிவாக எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

10. நடுவர்களின் தீரப்பே இறுதியானது. இது சம்பந்தமாக எந்த விதமான கடிதம் / தொலைபேசி தொடர்பும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

11. அனுப்பப்படுகின்ற ஆக்கங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.


Post a Comment

0 Comments