Ticker

6/recent/ticker-posts

23 வயதிலேயே மிகப் பெரிய பதவி. சாதனைப் பெண்ணின் கதை.

இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் IAS அதிகாரி ஆகியிருந்தார் ஸ்மிதா சபர்வால். அதுவும் இப்போது அல்ல. சரியாக 24 வருடம் முன்பே IAS ஆகி விட்டார். வெறும் 23 வயதில் இந்தியாவில் IAS அதிகாரியானவர்களில் இவரும் ஒருவர். 

இந்த 24 வருடத்தில் இந்தியா, தெலுங்கானாவின் 12 துறையில் பணியாற்றியுள்ளார். IAS ஆக ஆசைப்படுவோரும், வாழ்க்கையில் முன்னேற துடிப்போரும் இவருடைய வெற்றிக் கதையை பாருங்கள்.


அண்மையில் '12த் பெயில்' (12th Fail) என்ற திரைப்படம் IAS, IPS ஆக விரும்புவோருக்கு உத்வேகம் தந்த படமாக அமைந்துள்ளது. அந்த படம் சிவில் சர்வீஸ் எழுதுவதற்காக டெல்லி நகர வீதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் படித்து வரும் இளைஞர்களை பற்றிய கதையாக இருக்கும். அந்த படத்தில் வரும் அத்தனை காட்சிகளும் உண்மையான சம்பவத்தின் பின்புலம்தான். அவ்வளவு எளிதாக IAS அதிகாரியாகவோ, IPS அதிகாரியாகவோ ஆகி விட முடியாது, அதற்கு 06 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களை படித்து கரைத்து குடித்திருக்க வேண்டும்.

இது தவிர எந்த விருப்ப பாடத்தை தேர்வு செய்கிறார்களோ, அதில் இவர்களுக்கு தெரியாத விடயங்களே இருக்கக் கூடாது. முழுமையாக ஆத்மார்த்தமாக படித்து சரியான பயிற்சி மேற்கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர். கல்வி என்ற ஆயுதம் மூலமாக யார் மிக மிக துல்லியமாக இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுகிறார்கள். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், யார், மிக குறைவாக தவறுகளை செய்கிறார்களோ அல்லது தவறு செய்யாமல் கடக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். IAS, IPS, IFS,  வன அதிகாரி, தபால் அதிகாரி, ரயில்வே அதிகாரி உள்ளிட்ட UPS தேர்வு என்பது பலருக்கும் மிகப் பெரிய கனவு. அதனை அடைவதற்கு கல்வி மட்டுமே ஆயுதமாகும்.

இந்தியாவில் UPSC  சிவில் சேவை தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது டீ காபி சாப்பிடுவது போன்று எளிதானது அல்ல. பலரும் 02 அல்லது 03 முயற்சிகளுக்குப் பிறகும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போராடுகிறார்கள். முதற்கட்ட தேர்வில் வென்றாலும் பிரதானமான தேர்வில் வெல்வது எளிதானது இல்லை. 

பலரும் பலமுறை முயற்சித்தும் வெற்றி பெற முடியாத சிம்மாசனம் அதுவாகும். கல்வியின் மூலம் உயர்ந்த அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு UPSC தேர்வு மிகச் சிறந்த உதாரணமாகும். இதனை மிக இளம் வயதிலயே சாதித்தவர்களில் பலர் உள்ளனர். 

இவர்களுள் IAS அதிகாரி ஸ்மிதா சபர்வாலும் ஒருவர். UPSC தேர்வில் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்ற இவர், வெறும் 23 வயதில் இந்தியாவின் IAS அதிகாரியானார்.

1977 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெங்காலி குடும்பத்தில் பிறந்தவர் இந்த ஸ்மிதா சபர்வால். இராணுவ அதிகாரி கர்னல் பிரணாப் தாஸ் மற்றும் புரபி தாஸ் ஆகியோரின் மகளாவார். மிக இளம் வயதில், வெறும் 23 வயதில் ஸ்மிதா சபர்வால் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் இளம் பெண் IAS அதிகாரிகளில் ஒருவரானார். 

ஸ்மிதா சபர்வால் ஹைதராபாத் நகரிலுள்ள மிகபவும் பிரபலமான பகுதியான செகந்திராபாத்திலுள்ள செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின்னர் ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட்டிலுள்ள கத்தோலிக்க சிறுபான்மை நிறுவனமான செயின்ட் பிரான்சிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.

IAS அதிகாரி ஸ்மிதா சபர்வால் "மக்கள் அதிகாரி" என்று மக்களால் பெரிதும் போற்றப்படுகிறார். வாரங்கல், விசாகப்பட்டினம், கரீம்நகர் மற்றும் சித்தூர் உட்பட ஒருங்கிணைந்த ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட மிகவும் இளம் வயது நிறைந்த அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஸ்மிதா சபர்வால் 2001 ஆம் ஆண்டு வெளியேறிய IAS அதிகாரி ஆவார். (2001 IAS Batch) ஸ்மிதா சபர்வால் 2000 ஆம் ஆண்டில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் அகில இந்திய அளவில் 04 வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். தெலுங்கானா முதல்வரின் அலுவலகத்தில் செயலாளரும், மூத்த IAS அதிகாரியுமான ஸ்மிதா சபர்வால் தற்போது தெலுங்கானாவிலுள்ள நிதிக் கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments