Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால் இஸ்ரேல் அழியும் என தெரிவிப்பு.

2024 நவம்பர் 05 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரசாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வருகின்ற டிரம்ப் உலக அரசியலில் அமெரிக்கா பின் தங்கியுள்ளதாகவும் கூறி வருகின்றார்.



இந்நிலையில், தான் இத்தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள்தான் பாதி காரணமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் (20) நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் இஸ்ரேல் இன்னும் 02 வருடங்களில் பூமியிலிருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணமாகும் என்று தெரிவித்துள்ளார்.



ஏனெனில், யூதர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், கமலா ஹாரிஸ் யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் காணப்படுகின்ற நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான் என்று தெரிவித்த அவர், முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளி விவரங்களைஙும் பட்டியலிட்டார்.



மேலும், சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஈரான், லெபனான், யெமன் உள்ளிட்ட நாடுகளுடன் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருவதும் கவனிக்கத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments