Ticker

6/recent/ticker-posts

விடை பெறுகிறார் ரணில் விக்கிரமசிங்க. தேங்க்யூ மிஸ்டர் ப்ரசிடன்ட்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் கடைசி நாளாக இன்று (22) இருக்கலாம். பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்து காணப்பட்ட போது அவர் இலங்கையை பொறுப்பேற்றார்.  

02 வருடங்களில் அமைதியான மற்றும் நம்பகமான ஜனாதிபதித் தேர்தலை அனுமதிப்பதற்கு போதுமான ஸ்திரத்தன்மையைக் அவரால் கொண்டு வர முடிந்தது.

சமீப கால சம்பவம் பின்னணியை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். ஓவ்வொரு நாடும் திவால் நிலையை அறிவித்த பிறகு லெபனான் 05 வருடங்ககளில் 04 பிரதமர்களையும், ஆர்ஜென்டினா 18 மாதங்களில் 06 ஜனாதிபதிகளையும், கிரீஸ் நாடு 04 வருடங்களில் 07 பிரதமர்களையும் கடந்தது. 

இதனூடாக, ரணில் விக்கிரமசிங்க நாட்டை மோசமான சரிவிலிருந்து 02 ஆண்டுகளில் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். இது உண்மையிலேயே போற்றத்தக்க நிகழ்வாகும்.

தனது ஆட்சிக் காலத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலருடன் இருந்த போதிலும், இக்கட்டான காலத்தில் இலங்கைக்காக ரணில் செய்த தியாகம் காலத்துக்கும் மறவாதது. இவருடைய மகத்தான சேவையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவருக்கு நன்றிக் கடன் பட்டவராக இருக்க வேண்டும். தேங்க்யூ மிஸ்டர் ப்ரசிடன்ட்.

புதிய ஜனாதிபதியுடன் ஊழலற்ற சிறப்பான இலங்கையை காண்பதற்கு பிரார்த்தனை செய்வோம்.



Post a Comment

0 Comments