Ticker

6/recent/ticker-posts

கல்கத்தா அணியில் இணைந்த பிராவோ. காரணம் இதுதான்.

 மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 


ஆனால், அவர் உலகமெங்கும் நடைபெற்று வந்த T20 தொடர்களில் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வந்தார். அத்தோடு IPL தொடரிலும் சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கரிபியன் லீக் தொடருக்கு பின்னர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.


அவர் ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே கொல்கத்தா நைட்.ரைடர்ஸ் (Kolkata knight Riders) அணியின் மென்டராக நியமிக்கப்பட்டுள்ளார். IPL தொடரை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக சென்னை அணியின் விசுவாசியாக இருந்த பிராவோ தற்போது சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேறி கொல்கத்தா அணியின் மென்டராக மாறியுள்ளார்.



கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது IPL தொடரில் மட்டுமில்லாமல் தங்கள் வசம் இருக்கும் 04 அணிகளின் ஆலோசகர் பதவியையும் அவருக்கு வழங்கியுள்ளதாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக்கில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை தம்வசம் வைத்துள்ளது.


அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி (MLC) தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை தங்கள் வசம் வைத்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு T20 தொடரான இன்டர்நேஷனல் T20 தொடரிலும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வைத்துள்ளது. இப்படி 04 அணிகளுக்கும் சேர்த்து ஆலோசகர் பதவியை வழங்கியதாலே பிராவோ அந்த அணியின் நிர்வாகத்தின் அந்த அழைப்பை ஏற்றுள்ளதாக கூறப்படுகின்றது



சென்னை அணியில் இருந்தால் குறித்த அணியின் ஆலோசகராக மட்டுமே இருக்க முடியும். ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இச்சலுகையை பிராவோ ஏற்றுக் கொண்டதால் 04 அணிகளுக்குமே இவர் ஆலோசகராக செயற்பட இருக்கிறார். இதன் மூலமாக ஆண்டு முழுவதும் வேலை நிரந்தரம் என்பது மட்டுமன்றி கோடிக்கணக்கில் பணமும் கிடைக்கும் என்பதனால் பிராவோ சென்னை அணியை விட்டும் கொல்கத்தா அணிக்கு நகர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments