Ticker

6/recent/ticker-posts

எரிபொருள்களின் விலை குறைந்தது. விலைப்பட்டியல் இதோ!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.


92 ஒக்டேன் ரக பெட்ரோல் 21 ரூபாவால் குறைக்கப்பட்டு 311 ரூபாவாகவும்,
ஒட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு 283 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 33 ரூபாவால் குறைக்கப்பட்டு 319 ரூபாவாகவும் கூட்டுத்தாபனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் ரக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்பதுடன், மண்ணெண்ணெய் 19 ரூபாய் குறைந்து ரூ.183 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments