Ticker

6/recent/ticker-posts

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவி நிலைகளில் மாற்றம்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச இன்று (27) நடவடிக்கை மேற்கொண்டார்.


இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களும், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ கபீர் ஹாசிம் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களும் இன்று (27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களினால் நியமிக்கப்பட்டனர்.




Post a Comment

0 Comments