Ticker

6/recent/ticker-posts

பிரதமரின் அந்தரங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரின் மகள் ஹஸ்ஸானா.

பிரதமரின் அந்தரங்க செயலாளராக ஹஸ்ஸனா நியமிக்கப்பட்டிருப்பது சேகு இஸ்ஸதீனின் மகளாக அல்ல. ஒரு வழக்கறிஞராகவும் அர்ப்பணிப்புள்ள மனித உரிமை செயற்பாட்டாளராகவும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆய்வாளராகவுமே ஹஸ்ஸனாவுக்கு இந்த நியமனம் கிடைத்துள்ளது. பிரதமர் தோழர் ஹரிணியும் தோழர் ஹஸ்ஸனாவும் நீதிக்கான சமூகப் போராட்டங்களில் பல ஆண்டுகளாக அருகருகே உழைத்துள்ளனர். 

நான் இலங்கையில் இருந்தபோது கலந்து கொண்ட அனைத்துப் போராட்டங்களிலும் சமூக அரசியல் பொது நிகழ்வுகளிலும் தவறாமல் சந்தித்துத் தோழமை பாராட்டிய இரு பெண்கள் இன்று இலங்கையின் உயர்ந்த அந்தஸ்த்துகளைப் பெற்றுள்ளதை அவர்களுக்கேயான அங்கீகாரமாக மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைவருக்குமான மதிப்புமிக்க நிகழ்ச்சியாகப் பார்க்கிறேன். அரசியல் பின்புலம், குடும்ப அந்தஸ்த்து போன்ற பாரம்பரியங்களுக்காக அல்லாமல் ஒரு நபரை அவர்களது சமூக அக்கறைக்காகவும் நீதிக்கான போராட்டங்களுக்காகவும் கல்வித் தகைமைக்காகவும் மதிக்கும் ஓர் அரசாங்கம் நம் நாட்டில் உருவாகியிருப்பது ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் நம்பிக்கையும் சுயபிரக்ஞை மீது மதிப்பும் உண்டாக்குவதாகும். இந்தப் பண்பாட்டை ஏற்று மதிக்கும் கலாசாரத்திற்கு இலங்கையர் அனைவரையும்  புதிய அரசாங்கம் விரைவில் பழக்கப்படுத்தி விடும்.

ஹஸ்ஸனா சேகு இஸ்ஸதீன் என்றால் யார் என்று அறியத்தக்க சுய அடையாளம் ஹஸ்ஸனாவுக்கு உண்டு. எனவே முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் மகள் ஹஸ்ஸனா என அவரை யாரும் முன்னிறுத்தி எழுத வேண்டியதில்லை.

-சர்மிளா செய்யித் -



Post a Comment

0 Comments