Ticker

6/recent/ticker-posts

பயணியின் உணவில் உயிருடன் எலி. அவசரமாகத் தரையிறங்கியது விமானம்

விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது பயணிக்கு கொடுத்த உணவில் இருந்த எலி தாவிக் குதித்து ஓடியதால் விமானம் அவசரமாகத் தரையிறங்கியிறக்கப்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

Scandinavian Airlines விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இருந்துள்ளது. இதனையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.



விமானத்திலிருந்த பயணி தம்முடைய உணவுப் பொட்டலத்தைத் திறந்த போது எலி வெளியே குதித்து ஓடியுள்ளது.

இதனையடுத்து, குறித்த விமானம் நோர்வே (Norway) தலைநகரான ஓஸ்லோவிலிருந்து (Oslo) ஸ்பெயினிலுள்ள மலகா (Malaga) நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்தே விமானம் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் (Copenhagen) அவசரமாக இறங்கியது.

விமானம் தரையிரங்கிய பின்னர் பயணிகள் வேறொரு விமானத்தின் மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர். விமானத்தில் 'எலிகள்' என்று வரும் போது விமான நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று BBC தெரிவித்துள்ளது. 

ஏனெனின், விமானத்தில் இருக்கும் மின்சாரக் கம்பி வடங்களை எலிகள் மென்று விடும் அபாயமுண்டு.

இது போன்ற சம்பவம் நிகழ்வது மிகவும் அரிது என்றும் விமான நிறுவனத்தின் பேச்சாளரொருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அத்தோடு, மீண்டும் எலி வராமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலிம் கூறியுள்ளார்.
ஆதாரம் : Others/BBC

Post a Comment

0 Comments