Ticker

6/recent/ticker-posts

மதுபானசாலை அனுமதிப் பத்திரம் குறித்து வெளியான முக்கிய விடயம்.

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்ப் பட்டியல் தந்போது கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன என்றும் ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன், அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments