Ticker

6/recent/ticker-posts

புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அதிஷி.

புதுடெல்லி (New Delhi) முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து MLA-க்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
புதிய முதல்வராக தேர்வு செய்வதற்கு கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம்-ஆத்மி MLA-க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. புதுடெல்லியில் நடைபெற்ற ஆம்-ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இச்சந்திப்பானதி புதுடெல்லியில் கெஜ்ரிவால் இல்லத்தில் MLA-க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் MLA-க்களுடன் நடந்து வரும் கூட்டத்தில், அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து MLA-க்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்-ஆத்மி கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவாலால் அடுத்த முதல்வராக முன்மொழியப்பட்டுள்ள அமைச்சர் அதிஷி, புதுடெல்லி அரசின் கேபினட் அமைச்சராகவும் உள்ளார். 
அவர் தன்னிடம் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல முக்கியதமான துறைகளைத தன்னிடம் வைத்துள்ளார். புதுடெல்லியின் கல்காஜி தொகுதியிலிருந்து MLA-யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிஷி கடந்த 2013  ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாஹுல் ஹமீத், திருச்சி

Post a Comment

0 Comments