Ticker

6/recent/ticker-posts

ஒரு அபலையின் டயரி குறித்த பார்வை

மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்த நாவல். இப்போதுதான் முழுமையாக வாசிக்க கிடைத்தது. இலங்கையின் எழுத்தாளர்களில் முதன்மையான ஒருவர் ஜரீனா முஸ்தபா. இவரின் நூல்கள் எப்போதும் வாசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும் நூல்களாகவே அமையப் பெற்றிருக்கும்.

இந்நாவலின் கதைக்கருவும் வித்தியாசமான முறையில் கதையை நகர்த்திச் செல்கின்றது. ஒரு இஸ்லாமிய சூழல் கதைக்களமாக அமைந்துள்ளதுடன் அழகிய குடும்பமொன்றே கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றது.

ஒரு பேய் உலகத்தினுள் கதை செல்வது போல் இருக்கும். ஆனால், எல்லாம் பிரம்மை. எனக்கே ஓர் இடத்தில் கதையை வாசித்துச் செல்லும் போது பயம் பிடித்து விட்டது. இருந்தும் இடை இடையே நகைச்சுவை போல இருக்கும் இந்த பேயின் விளையாட்டு..

"கதைக்குள் ஒரு கதை" அதுதான் இங்கு பிரதானமானதாகும். அக்கதையானது நிஜமாதல் இன்னும் அதிகமாய் சுவரஷ்சியம் தருகின்றது.

தோழமை துரோகம் செய்தல் கதையின் இன்னொரு பாகமாக உருவெடுத்துள்ளது. வாசிக்கப்படும் கதையில்தான் தோழமை துரோகம் செய்கின்றது. இருந்தும் நிஜத்தில் தன் தோழமை துரோகம் செய்து விடுமோ? என்ற அச்சத்தில் தன் உயிர் தோழியை விட்டும் விலகி   விடும் நிலை கண் கலங்க வைத்து விடுகின்றது.  

கதையின் இறுதிப்பகுதியானது இன்னும் இன்னும் அழகாய் அமைந்துள்ளது. கதை முற்றுப் பெற்றாலும் இன்னும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலையை எழுத்தாளர் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்.

நவீன சினிமாவின் தாக்கங்களுடன்,  அவற்றிலிருந்து ஒரு விடுதலைக் கருவியாக இந்நூல் அமைந்துள்ளது எனலாம். நீங்களும் ஒரு முறை வாசித்துப் பார்த்து விட்டு உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ❤️

-ஷஸ்னா ஹஸீன் -

Post a Comment

0 Comments