Ticker

6/recent/ticker-posts

விவாகரத்து ஏன்? நடிகர் ஜெயம் ரவி விளக்கம்

"எனக்கென்று தனி வங்கி அக்கவுண்ட் கிடையாது. எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ஜாயின்ட் அக்கவுண்ட்தான். ஆனால், எனது மனைவிக்கு தனியாக நான்கைந்து அக்கவுண்ட்கள் உண்டு. 

எங்களது ஜாயின்ட் அக்கவுண்ட்டில்  நான் பணம் எடுத்தால் அந்த விபரங்கள் ஆர்த்திக்கு சென்று விடும்.  டெபிட் கார்ட் பயன்படுத்தினால் அந்த விபரங்கள் ஆர்த்தி தொலைபேசி எண்ணுக்கு செல்லும். OTP எண் ஆர்த்திக்குத்தான் செல்லும். ஒவ்வொரு சிறு சிறு செலவுக்கு உடனே உடனே நான் கணக்கு சொல்ல வேண்டியிருக்கும். வெளிநாட்டில் ஷூட்டிங் சென்றால், அங்கு நான் சாப்பிடுகின்ற பில்லுக்கு கூட ஆர்த்தியிடம் கணக்கு சொல்ல வேண்டும். 

ஆனால், ஆர்த்தி லட்சக்கணக்கான ரூபா எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல் செலவுகளை செய்வார். அதை யாரும் கேட்க முடியாது. 

என்னுடைய போனில் Whatsapp வைத்திருப்பதால் பிரச்சினை என்று நான் 06 வருடமாக வாட்ஸ்அப் இல்லாமல் இருந்தேன். இன்ஸ்டாகிராமின் பாஸ்வேர்டு அவரிடம்தான் இருந்தது. அதனால் தான் விவாகரத்தை டிவிட்டரில் அறிவித்து பின்னர் இன்ஸ்டாகிராம் கணக்கை மெட்டா மூலமாக மீட்டேன். 

ஆர்த்தியின் அம்மாவுக்காக 03 திரைப்படங்கள் நடித்துக் கொடுத்தேன். 03 படங்களும் தோல்வி என்று கூறினார்கள்.  என் அப்பா, அண்ணன் தயாரிப்பு நிறுவனத்திலுள்ள ஒருவரை வரச் செய்து கணக்குப் பார்த்தால், அனைத்துமே இலாபம் ஈட்டி இருக்கிறது என்று தெரிய வந்தது. 

நான் நடித்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் ஆர்த்தியின் பெயரிலும், சில சொத்துக்கள் என்னுடைய மற்றும் ஆர்த்தியின் பெயரில் மாத்திரமே உள்ளன. அப்படி இருந்தும்கூட "தோல்வி கணக்கு" சொல்லி ஏன் பணத்தை சுரண்டுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.  

எல்லாவற்றுக்கும்  மேலாக நானும் ஆர்த்தியும் வாழ்ந்த வீட்டிலுள்ள பணியாளர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட எனக்கு கிடைக்கவில்லை.  பணியாட்களின் முன்பாக நான் தினமும் அவமானப்படுத்தப்பட்டேன். அதனால்தான் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளேன்''  என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments