Ticker

6/recent/ticker-posts

பிரதமராகப் பதவியேற்ற ஹரிணி அமரசூரிய யார்?

01. ஹரிணி அமரசூரிய 1970 மார்ச் 06 ஆம் திகதி இல் பிறந்தார்.

02. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் முனைவர் பட்டம் பெற்ற 02 வது இலங்கை பெண்.


03. இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சமூக ஆய்வுகள் துறையில் மூத்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

04. 2019 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவபடுத்தினார்.

05. 2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரசாரம் செய்தார்.

06. 2020 அன்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைய தேசிய பட்டியல் வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். 

08. இலங்கையில் பரம்பரை ரீதியாக இருந்த 02 பெண் பிரதமர்கள் போல் இல்லாமல் தனித்து வரும் ஒரே பெண் பிரதமர் இவராவார்.

09. இடது சாரி கொள்கையுடன் தேசியப் பட்டியலினூடாக நாடாளுமன்றத்திற்குள் வந்து குறுகிய காலத்திலேயே பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Post a Comment

0 Comments