Ticker

6/recent/ticker-posts

மழைத்துளியையும் கொண்டாடும் அதிபரும் சிறுமியும்.

இந்த ஒளிப்படத்தினை ஈத் படிக்கின்ற பள்ளிக்குச் சென்றவேளை எடுத்தேன். திடீரென வானிலிருந்து மழைத்துளிகள் இறங்க அங்கே நின்றிருந்த பள்ளிச் சிறுமி கைகளை விரித்து ஆடினாள். அவளைப் பார்த்துச் சிரித்து ரசிப்பது பள்ளி அதிபர் Kaye Kennedy. இது இலங்கையில் அல்ல. வெளிநாட்டில்தான்.


இதனைப் பார்த்ததும் மற்றெல்லாரையும் போல சாதாரணமாக கடந்துவர முடியாதிருந்தது. நாம் படித்த பள்ளிகளில் வாய்த்த அதிபர்களுக்கு முன்னால் கை விரித்து ஆடவா நமக்கு முடிந்தது. இந்த ஒரு படம், இந்த ஓர் அரிய காட்சி போதுமாயிருக்கிறது பள்ளி என்பது எப்படி இருக்க வேண்டும், அதிபர் எப்படியானவராய் இருக்க வேண்டும் என்று உணர்த்த!

பள்ளி அதிபரை எதிரே சந்திக்கவும் தயங்கியவர்கள் நம்மில் எத்தனை பேர்?

-ஷர்மிளா செய்யித் -

Post a Comment

0 Comments