Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி தேர்தலின் முக்கியமான விடயங்கள். சுருக்கமான குறிப்புகள்.

01. இலங்கையின் 09 வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நாளை (23) முற்பகல் 9.00 AM மணிக்கு அநுர குமார பதவிப் பிரமாணம்.

02. பல தோல்விகளுக்கு பிறகு JVP க்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. 

03. கொழும்பு, அம்பாந்தோட்டை, கம்பஹா உட்பட 15 தேர்தல் மாவட்டங்களில் அநுர முதலிடம்.

04. நுவரெலியா, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சஜித் வெற்றி. 

 05. 79.46 வீதமானோர் வாக்களிப்பு: 3 லட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு. 

 06. அதிக தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள சிறிதுங்க ஜயசூரியவுக்கு – 8,954 வாக்குகள்.

 07. ஐ.தே.க. சார்பில் டம்மி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் எனக் கூறப்படும் ரணிலின் விசுவாசியான கே. கே. பியதாச 46, 543 வாக்குகளைப் பெற்று 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

08. மலையகத்திலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கே.ஆர்.கிரிஷான் 13,595 வாக்குகளையும், எம். திலகராஜா 2,138 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


ஆர்.சனத்

Post a Comment

0 Comments