Ticker

6/recent/ticker-posts

GCE (O/L) பரீட்சை விடைத்தாள்கள் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்.

GCE (O/L) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 தொடக்கம் ஒக்டோபர் 15 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (29) அதிகாலை வௌியாகி இருந்தது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். பGCE (O/L) பரீட்சையானது நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

1911 
011 2 785 922
0112 786 616
011 2 784 208
011 2 784 537 


Post a Comment

0 Comments