Ticker

6/recent/ticker-posts

13 நாட்களில் பில்லியன் கணக்கில் கடன் வாங்கியுள்ள புதிய அரசாங்கம். எவ்வளவு தெரியுமா?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம் மற்றும் பிணைமுறி கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.


விஷேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் வரம்பற்ற கடன்களை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு - மக்களுக்கு 13 வது திருத்தச் சட்டமும், அதிகாரப் பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள குறித்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக் கொண்டுள்ளது என்று ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments