Ticker

6/recent/ticker-posts

2024 இற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வருகின்ற விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச் சிறந்த முறையில் பங்காற்றியமைக்காக நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.


 

அந்த வகையில், இவ்வருடம் மைக்ரோ ஆர்.என்.ஏ வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக சுவீடனின் கரோலின்ஸ்கா பயிற்சி மையத்திலிருந்து இன்று (07)  அறிவிக்கப்பட்டுள்ளது.


 

மேலும், செவ்வாய்கிழமை (08) இயற்பியலுக்கான நோபல் பரிசும், புதன்கிழமை (09) வேதியியலுக்கான நோபல் பரிசும் மற்றும் வியாழக்கிழமை (10) இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்படவுள்ளதுடன் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு ஒக்டோபர் 14 ஆம் திகதியும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments