Ticker

6/recent/ticker-posts

அமெரிக்கா கிறீன் கார்ட் விசா (2026) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்றே விண்ணப்பியுங்கள்.

மெரிக்க லொத்தர் விசாவுக்கான (Green Card Visa) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

2024 ஒக்டோபர் 02 ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 9.00 PM தொடக்கம் 2024 நவம்பர் 05 ஆம் திகதி வரை ஆன்லைன் ஊடாக விண்ணப்பங்களை சம்ர்ப்பிக்க முடியும்.


தகைமை:

 01. உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களில் சித்தியடைந்தவர். அல்லது, 02 வருட தொழிற்பயிற்சி தேவையுடைய தொழில் ஒன்றில் 2 வருட அனுபவமுள்ளவர் ஒருவருக்கு மட்டுமே நேர்முகத் தேர்வின் பின் விசா வழங்கப்படும்.

GCE A/L சித்தியடைந்த எல்லோரும் விண்ணப்பிக்கலாமா/

01.  வேலை or கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு (G.C.E A/L) சித்தியடைந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகைமைகள் இருக்க வேண்டும்.

அல்லது,

கடந்த 05 வருடத்தில் இரண்டு வருட தொழிற்பயிற்சி தேவைப்படும் ஒரு தொழிலை (Professional Occupation) 02 வருடங்களாவது செய்திருக்க வேண்டும். உங்கள் தொழிலுக்கு அனுபவத்திற்கு  என்ன அடிப்படை தேவை என்பதை கீழ் கண்ட website இல் போய் உங்கள் வேலையை search  செய்து என்ன கல்வி/ தொழிற்பயிற்சி என அறிந்து கொள்ள முடியும். WEBSITE: http://www.onetonline.org

02. ஒருவர் ஒரு விண்ணப்பத்துக்கு மேல் சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கும் தகுதியை இழப்பார்கள்.

03.  உங்கள் online விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான முகவரி: dvprogram.state.gov

04. இந்த இணைய முகவரியினூடாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை. 

05. விண்ணப்பத்தை கவனமாகவும், தெளிவாகவும் நிரப்புங்கள். விண்ணப்பிக்க முன்னர் தேவையான விபரங்களை, கடவுச்சீட்டு, புகைப்படம், பிள்ளைகள், மனைவி போன்றோரின் விபரங்களை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது.

06. புகைப்படம் எடுக்கும் போது கவனிக்க வேண்டியவை:

 a). முன்னர் பயன்படுத்திய புகைப்படத்தை பாவிக்க முடியாது. தெளிவான புகைப்படமாக இருத்தல்

b). உங்கள்  தலை படத்தின் 1- 1 1/3 ” inch  (22 mm –  35 mm ) இற்குள் வரணும் 2″ × 2″ 300 pixels per inch digital photo 

C).  கண்ணாடி, தொப்பி போன்றவை அணிந்திருக்க முடியாது.

d). சமய காரணம் தவிர தலைமுடியை மறைக்க கூடாது 

e). நிழல் விழுந்திருத்தல் கூடாது

f). புகைப்படத்தில் நீங்கள் சிரிக்கவோ முறைக்கவோ கூடாது

g). சாதாரணமாக போடும் சட்டையுடன் எடுக்கலாம்

h).  கண்கள் மூடாமல் திறந்து இருக்க வேண்டும்


07.  உங்களுடைய ஈமெயில் ஊடாக விண்ணப்பத்தை சமர்பித்த பின் confirmation பக்கத்தை print பண்ணி வைத்திருங்களௌ இதிலுள்ள confirmation number உங்களுக்கு பின் online இல் விண்ணப்பத்தின் status check பண்ணுவதற்கு தேவைப்படலாம்.

08. உங்களுக்கு மனைவி பிள்ளைகள் இருந்தால் அவர்கள் விபரங்களை நீங்கள் கொடுக்கவே வேண்டும். விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கும் கடவுச்சீட்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் திருமணமானவர் என்றால் கட்டாயம் மனைவியின் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளும் உள்ளடக்கப்படவேண்டும். இல்லையெனில், பின்னர், உள்ளடக்க முடியாது

09.  கணவனும் மனைவியும் தனித்தனியாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அவர்களில் யாருடைய விண்ணப்பம் குழுக்களில் தெரிவு செய்யப்பட்டாலும் இருவரும் பயணிக்க முடியும்.

10. குழுக்களில் தெரிவு செய்ஙப்பட்ட விண்ணப்பத்தாரிகள் தமது விபரங்களை இந்த லிங்கில் பார்க்க முடியும்.  dvprogram.state.gov 

11. விண்ணப்பத்தை திறந்து 60 நிமிடங்களில் விண்ணப்பித்தல் வேண்டும்.  60 நிமிடத்தில் முடிக்கவில்லை எனில் உங்கள் விபரங்களை சமர்பிக்க முடியாது. மீளளும்வ்முதலில் இருந்து தொடங்க வேண்டும். பிழையாக நிரப்பி அனுப்பிவி ட்டால் மறுபடி சரியாக நிரப்பி அனுப்ப 02 விண்ணப்பங்கள் ஆகி விடும். நீங்கள் விண்ணப்பிக்க முடியாதவராக நிராகரிக்கப்படுவீர்கள்.

12.  கிரான் கார்ட் குழுக்களில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் dvprogram.state.gov என்ற  website இல் உங்கள் confirmation number மூலம் உங்கள் விண்ணப்பம் தெரிவாகியுள்ளதா?  இல்லையா? என்பதை அறிய முடியும்.

13. விண்ணப்பம் ஆரம்பத் திகதி: 2024 ஒக்டோபர் 02 இரவு 9.00 PM ஆகும். 

14. விண்ணப்பம் முடிவுத் திகதி: 2024 நவம்பர் 05 மதியம் 12.00 PM Est

Post a Comment

0 Comments