Ticker

6/recent/ticker-posts

"நிதர்சனத்தின் நிழல்" குறித்த பார்வை.

கவிஞர் முபீதா அமீன் அவர்களின் "நிதர்சனத்தின் நிழல்" கவிதை நூல் கிடைக்கப் பெற்றது. நூலாசிரியருக்கு மிக்க நன்றி.

நேர்த்தியான அழகிய வடிவமைப்பும், கண்ணை உறுத்தாத கரிசனையான அச்சாக்கம், பொருத்தமான எழுத்துருக்கள்; மொத்தத்தில் அழகு.

உள்ளே, 

ஆசியுரை: மூத்த எழுத்தாளர் பொன் விழாக் கண்ட பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களுடையது. 

வாழ்த்துரைகள்: மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக் மற்றும் நாட்டார் கவி வித்தகர் எழுகவி ஜெலீல்

பதிப்புரை: ஏட்டுலா கனவாக்கம் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன்.

வாழ்த்துப் பா: வாழ்த்துப் பாக்களைச் சொரிந்துள்ளார் தமிழ்நெஞ்சம் பிரதம ஆசிரியர் அமின் மொஹமட் (பிரான்சு) அவர்கள். உண்மையில் அனைத்துமே நூலுக்கு உரமூட்டுகின்றன.

அடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மதிப்புக்குரிய எம். அப்துல் றஸாக் அவர்களின் அணிந்துரையைப் படித்தாலே போதும். எழுதுகிறவன் எழுதினால்தான் எழுத்தும் வடிவு பெறும் என்பது போல ஒரு கவிதைப் பிரதி எவ்வாறு அமையவேண்டுமென அழிகியலோடு சொல்லித் தருகின்றார். 

முபீதா அமீன் அவர்களின் கவிதைகள் முதிர்ச்சியின் முழு வடிவங்களாகத் தோன்றுகின்றன; சிந்திக்கத் தூண்டுகின்றன. எழுத்து நடையின் எளிமை அவரது கவிதைகளுக்கு ஆயுள் கெட்டி எனப் பறை சாற்றுகின்றது.


நூலின் பெயர்: நிதர்சத்தின் நிழல்.
கவிதைகள்: 120 (அகர வரிசையில்)
பக்கங்கள்: 124
நூலாசிரியர்: முபீதா அமீன்
வடிவமைப்பு: ஆயிஷா சகீலா உமர்தீன்
வெளியீடு: ஏட்டுலா கனவாக்கம்.
அச்சு: மூதூர் JMI வெளியீட்டகம்.
நூலினைப் பெற்றுக் கொள்ள: 076 250 8836



Post a Comment

0 Comments