Ticker

6/recent/ticker-posts

ரத்தன் டாடாவின் பெயரில் பல்கலைக்கழகம்.

TATA குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் மரணித்தார்.



ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வெற்றி கண்டவர். பிரபல தொழிலதிபரான
இவர் டாடா குழுமத்தின் (TATA Group) இன் தலைவராக 21 வருடங்கள் கடமையாற்றினார்.
இவர் தனது சமூக சேவைப் பணிக்காக மக்களால் பெரிதும் அறியப்பட்டவரும், போற்றப்படுபவருமாவார்.

இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரினை சூட்டப்படுவதாக அந்த மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்பவர் அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பல்கலைக்கழகம் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





Post a Comment

0 Comments