Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. கருணாரத்ன அவர்கள், நாட்டில் எரிபொருள் போதியளவு கையிருப்புடன் பராமரிக்கப்பட்டு வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  "கையிருப்பு பராமரிப்பு அட்டவணையை வாராந்திர அடிப்படையில் நிர்ணயித்து, நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்கான எதிர்கால திட்டங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ளது.

“எரிபொருள் கொள்வனவுகள் அடுத்த 03 மாதங்களுக்குப் பாதுகாக்கப்படுகின்றன, இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எரிபொருளை விநியோகிக்க  திட்டமிட்டுள்ளோம். எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்தவொரு தடங்கலான காரணமும் இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைவாக அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  “ஒரு விலை சூத்திரம் இன்றியமையாதது, எதனையும் மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  இது தொடர்பாக பொதுமக்களிடம் கலந்துரையாடுவோம்" என்று தெரிவித்தார்.

மின்சார விலை நிர்ணயம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றதோ அதே போன்று எரிபொருள் விலை நிர்ணயத்தை மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கருணாரத்ன அவர்கள் தெரிவித்தார்.  இந்த புதிய அமைப்பு விலை நிர்ணய செயன்முறையை பொது ஆய்வுக்குட்படுத்தும் என்பதுடன், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments