Ticker

6/recent/ticker-posts

அங்கீகரிக்கப்பட்ட சில கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வர்த்தமானி வெளியீடு.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் செயலாளர் பதவிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையின் காரணமாக பொதுத் தேர்தலில் 06 அரசியல் கட்சிகளுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியாதென்று தேர்தல் ஆணைக்குழு விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது.

ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி, ஐக்கிய லங்கா மகா சபை, லங்கா மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளே அவையாகும்.

1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டம் இலக்கம் 01 இன் கீழ் மேற்குறிப்பிட்ட கட்சிகள் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் பொதுத் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற 77 அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் செயலாளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையகம் தற்போது வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments