Ticker

6/recent/ticker-posts

மகனுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொழுத்திய தந்தை. குவியும் பாராட்டு.

மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை (Motor Bicycle) தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் மலேசியாவில் இடம் பெற்றுள்ளது.

மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாகக் கேட்டதால், மகனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால், அவருடைய மகன் குறித்த மோட்டார் சைக்கிள் மூலம் பந்தயப் போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டதோடு, வீட்டுக்கு மிகவும் தாமதமாகவும் வந்துள்ளார்.

இதனால் மகனின் பாதுகாப்பு பற்றிக் கவலையடைந்த தந்தை, மகனுக்கு அறிவுரைகள் கூறி திருத்த முயன்றுள்ளார்.

எனினும், அவருடைய மகன் தந்தையின் அறிவுரைகளைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் மகனுக்குப் பாடம் புகட்ட தந்தையான ஷா ஆலம் முடிவு செய்தார்.

இதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனைக் காணொளியாக (Video) பதிவு செய்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த காணோளியைப் பார்வையிட்ட பலரும் குறித்த தந்தைக்கு வாழ்த்துக்களையே தெரிவித்து வருகின்றனர். 




Post a Comment

0 Comments