Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலிடம் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. ஈரான் தெரிவிப்பு

 இஸ்ரேலிடமிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லாஹ் அல் கொமைனி தெரிவித்துள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் அவர் நிகழ்த்திய உரையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்’ என்று தெஹ்ரானில் நிகழ்த்திய உரையில் கொமைனி குறிப்பிட்டார்.


இதில் இஸ்ரேல் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (01) ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுக் கூறினார். தங்களின் தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் கொமைனி தெரிவித்துள்ளார். 



Post a Comment

0 Comments