Ticker

6/recent/ticker-posts

அநுர அரசாங்கத்தின் புதிய திட்டம்: திருகோணமலையிலிருந்து இந்தியாவிற்கு ரயில் பாலம் அமைப்பு.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 05 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி என்பவர் தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான புதுடில்லியின் முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கையினால் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும். 

இந்தியாவானது இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளதுடன், மிகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) பங்களிப்பாளர்களில் ஒன்றாக திகழ்கின்றது.

2021 இல் இலங்கையில் இந்திய முதலீடு சுமார் 142 மில்லியன் டாலர்களாகும். இந்நிலையில், "கடந்த மாதம் நான் இந்தியாவுடன் புதுதில்லியில் ஒரு சந்திப்பில் பங்கேற்றிருந்தேன். மேலும், இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பை ஏற்படுத்தவுள்ளோம்" என்று பி.கே. பிரபாத் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

"இரண்டு நாடுகளிலுமுள்ள தொழிலதிபர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாலும், சாலை மற்றும் ரயில் இணைப்புடன், இரு தரப்பினரும் உதவி பெறலாம் என்பதால் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. ஏனெனில், இது ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுடன் வர்த்தகத்திற்கு உதவும் என்பதோடு. இந்திய வர்த்தகர்களும் இலங்கையிடமிருந்து சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று சந்திரகீர்த்தி என்பவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னார் தீவிலுள்ள தலைமன்னார் கிராமத்திற்குமிடையில் தரைப்பாலத்தை இலங்கை அரசாங்கம் 2002 இல் முன்மொழிந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

குறித்த ஒப்பந்தத்தின்படி, பாக் ஜலசந்தியின் இருபுறமும் பொருளாதார நன்மைகளை வழங்கும் பொருட்டு, சாலை மற்றும் ரயில் பால இணைப்புகள் உருவாக்கப்படல் வேண்டும். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் வீதி அல்லது புகையிரதத்தினூடாக எந்தவொரு நிலத் தொடர்பும் இல்லை.

இலங்கைக்கு மிக அருகிலுள்ள இந்திய நகரமான தனுஷ்கோடியில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. ஆனால், அது 1964 இல் ஏற்பட்ட சூறாவளியில் அதி அடித்துச் செல்லப்பட்டது.

1966 வரை ஒரு குறுகிய படகு சவாரி இலங்கையில் தலைமன்னார் மற்றும் இந்தியாவின் தனுஷ்கோடியில் ரயில் நிலையங்களை இணைத்தது.



மேலும் “இத்திட்டத்திற்கான செலவு இன்னும் முடிவாகவில்லை. நாம் அதனைப் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும், ஆனால், அது கிட்டத்தட்ட 05 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு அனுமதிக்கும் வகையில் பாலங்கள் மற்றும் நீருக்கடியில் சுரங்கப்பாதைகளை அமைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 




Post a Comment

0 Comments