Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை அறிவிப்பதற்கு புதிய திட்டம் அறிமுகம்.

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் "Talk to Chairman" எனும் புதிய வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.


புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க இந்நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், அதில் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படுவதுடன் முறைப்பாட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும் நடவடிக்கைதள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 593 593 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தினூடாகவும் மற்றும் talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் (Email) முகவரியின் ஊடாகவும் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments