Ticker

6/recent/ticker-posts

முடி உதிர்வைத் தடுக்க இதனை செய்யுங்கள்.

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு வெங்காயச் சாறு பெரிதும் உதவியாக இருக்கும். வெங்காய சாற்றை தலைமுடிக்கு எப்படி அப்ளை (Apply) செய்வது என்பதை இப்பதிவு விளக்குகிறது.


வெங்காய சாறு எப்படி தயாரிப்பது?

வெங்காயத் துண்டுகளை எடுத்து, இவற்றுடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து அரைத்து எடுக்கவும். செய்யவும்.

அவ்வாறு அரைத்தெடுத்த வெங்காயச் சாறை சுத்தமான காட்டன் துணியில் வடிகட்டி பிழிந்து சாறு பெற முடியும். பருத்தியின் உதவியுடன் இச்சாற்றை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

வெங்காயச்சாறினை தலையில் இட்டு உலர்த்திய பின்னர் 30 - 60 நிமிடங்களின் பின்னர் தண்ணீரால் தலையை கழுவினால் போதும். மறுநாள், ஷாம்பூவால் (Shampoo) தலையை அலசவும். ஏனெனில், வெங்காயச் சாறு சற்று வாசனையை ஏற்படுத்தக்கூடும்.


வெங்காய சாறு மற்றும் கற்றாழை

கற்றாழையை வெங்காயச் சாறுடன் கலந்து தலையில் தடவினால் முடி வளர்ச்சியைத் தூண்டுவதோடு முடி உதிர்வதையும் குறைக்கும். ஏனெனில், கற்றாழையில் பல அற்புதமான பண்புகள் உள்ளன.

வெங்காய சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய்

வெங்காயச் சாற்றில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்யலாம். இது முடி உதிர்வுப் பிரச்சனையை குறைப்பதற்கு உதவும்.





Post a Comment

0 Comments