Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு.

தற்போது சில்லறை சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளை பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்நிலையில், சந்தையில் அதிக கேள்வி நிலவும் நாட்டு அரிசிக்கு அதிகளவில் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக மக்கள் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.


இவ்வாறான பின்னணியில், தமது சங்கத்திலுள்ள வர்த்தகர்களிடம் தேவையான அளவு அரிசி இருந்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கேற்ப அரிசியை விற்பனை செய்ய முடியாதென மரதன்கடவல அரிசி வர்த்தகர்களின் சங்கத்தின் உறுப்பினரான எஸ்.எஸ். ரணசிங்க என்பவர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி.குணரத்ன என்பவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments