Ticker

6/recent/ticker-posts

பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.

பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடாத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்தியக் கிழக்கில் பெரும் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் யெமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பிலிருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் (Email) மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் செங்கடலில் பயணித்த பிரிட்டன் எண்ணெய்க் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

யெமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரமான ஹுதைதாவில் [Hodeidah] இருந்து 110 KM தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Post a Comment

0 Comments