Ticker

6/recent/ticker-posts

சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்.

CEOWORLD என்ற இதழ் தொகுத்துள்ள வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலின் தரவரிசையில் இலங்கை 05 வது இடத்தை பிடித்துள்ளது.

முதலாவது இடத்தில் தாய்லாந்து, இரண்டாவது இடத்தில் கிரீஸ், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியா மற்றும் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் போன்ற நாடுகளும் காணப்படுகின்றன.

இதேவேளை, இலங்கை தொடர்பில் CEOWORLD இதழ், ஆயுர்வேத சிகிச்சை, மறக்க முடியாத ரயில் பயணங்கள் அல்லது தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிடுவது என அனைத்து வகையான பயணிகளுக்கும் இலங்கையின் மலைநாடு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.

பௌத்த விகாரைகளில் கொண்டாடப்படும் போயா சம்பிரதாயத்துடன், கலாசாரம் மற்றும் மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை எகாண்ப்படுவதாகவும், இலங்கையில் ஆரோக்கியமான காலை உணவை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளதென்றும், கூடுதலாக நுகர்வில் அதிக ஆர்வமுள்ளவர்களுக்கு இலங்கையானது ஒரு சிறந்த இடமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினங்கள், தேநீர், கைத்தறி துணிகள், தோல் பொருட்கள், பழங்கால பொருட்கள், நகைகள் மற்றும் மட்பாண்டங்கள் ஆகியவற்றையும் இலங்கையில் காணலாம். 295,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments