Ticker

6/recent/ticker-posts

முட்டையின் விலை மேலும் அதிகரிப்பு

அண்மையில் முட்டையின் விலை குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தற்போது மீண்டும் முட்டையின் விலை 45 ரூபாயை கடந்துள்ளது. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் காணப்பட்ட முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டையின் உற்பத்தி குறைவினாலேயே முட்டையின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய நிலவரத்தால் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments