Ticker

6/recent/ticker-posts

மீண்டும் கிரிக்கெட் அணியின் தலைவராக களமிறங்கும் சங்கக்கார.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் தொடரின் இலங்கை அணி தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் 2024 நவம்பர் 17 முதல் டிசம்பர் 08 வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் இந்தியா, இங்கிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற 06 அணிகள் மோதவுள்ளன.

இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஷேன் வாட்சன், இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன், மேற்கிந்தியத் தலைவராக தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் செயற்படவுள்ளதுடன், தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக ஜாக் கலீஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போட்டிகள் மும்பை, லக்னோ மற்றும் ராய்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments