Ticker

6/recent/ticker-posts

சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.

அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையினை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது.

அதன் அடிப்படையில் இந்த வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய விலைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், 01 கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 237 முதல் 269 ரூபா வரையில் விற்பனை செய்ய முடியும்.

கோதுமை மா ஒரு கிலோ கிராம் 149 ரூபா முதல் 177 ரூபா வரையும் 01 கிலோ கிராம் பருப்பு 270 ரூபாய் முதல் 317 ரூபாய் வரையும் விற்பனை செய்யப் படலாம்.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை  கிலோ ஒன்றுக்கு 160 முதல் 234 ரூபா வரையும், காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராம் 685 முதல் 845 வரையும் விற்பனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments