Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி அநுர குமாரவை சந்திக்க இலங்கை வரவுள்ள கோடீஸ்வரர் பில்கேட்ஸ்.

உலக கோடீஸ்வரர் ‘பில் கேட்ஸ்’ (Bill Gates) விரைவில் இலங்கை வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


கேட்ஸ் அறக்கட்டளையின்  (Gates Foundation) சுயாதீன ஆலோசகர் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.

இதன் போது, சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் விவசாய மாற்றத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியைச் சமாளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் குறித்து இக்கலந்துரையாடலில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு (டிபிஐ), கால்நடை வளர்ப்பு மற்றும் காலநிலை முன்முயற்சிகள் மீதான ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது விவாதிக்கப்பட்டது.

மேலும், இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்குமிடையிலான (Gates Foundation) பங்காளித்துவத்தை முறைப்படுத்துவதற்காக விரைவில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க கேட்ஸ் அறக்கட்டளையின் (Gates Foundation)  தலைமை நம்புவதாகவும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



Post a Comment

0 Comments