Ticker

6/recent/ticker-posts

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதற் தடவை CID இன் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரியொருவர் முன்மொழிவு.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதற் தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால என்பவரே இப்பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரியும் இவராவார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, தற்போது இலங்கை பொலிஸ் வரலாற்றில் சரித்திரம் படைக்கும் பெண் கதாபாத்திரமாக பார்க்கப்படுகின்றார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் 03 பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர்களில் இமேஷா முத்துமால என்பவரும் ஒருவராக உள்ளடங்குகின்றார்.

இவர் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியில் சேர்ந்தார்.

இவர் 2017 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வும் பெற்றார். இவர், ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியலும் பட்டம் பெற்றார்.

அத்தோடு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப் புலனாய்வுத் துறையின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments