Ticker

6/recent/ticker-posts

FIFA வில் இஸ்ரேலை இடைநீக்கம் செய்வது தொடர்பில் பலஸ்தீனத்தின் கோரிக்கை.

 இஸ்ரேலை இடைநீக்கம் செய்வதற்கான பலஸ்தீனத்தின் கோரிக்கையின் மீது எவ்விதத்திலும் எந்தவொரு தீர்ப்பையும் பீபா வழங்கவில்லை, மாறாக பாரபட்சமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.



2024 மே மாதம் பாங்காக்கில் நடந்த பீபா மாநாட்டில், பலஸ்தீனிய உதைபந்தாட்டச் சங்கம் (PFA) அதன் இஸ்ரேலிய போட்டியாளரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்றும், இஸ்ரேலிய அணிகள் பீபாவால் நடாத்தப்படும் போட்டிகளிலிருந்து தடை செய்யப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தது.



அதாவது, இஸ்ரேல் உதைபந்தாட்டச் சங்கம் பீபாவின் விதிமுறைகளை மீறியதாக பலஸ்தீன் தெரிவித்துள்ளது. பலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் ஹமாஸுடன் இஸ்ரேல் நடாத்திய போரில் 07 மாதங்களில் இக்குற்றச்சாட்டு எழுந்தது.



சுதந்திரமானதொரு சட்டப் பகுப்பாய்வை மறுபரிசீலனை செய்து, எவ்வாறு தொடரலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு, 2024 ஜூலை 20 ஆம் திகதிக்கு முன், பீபா (FIFA) மற்றும் அதன் ஆளும் குழுவின் அசாதாரண அமர்வை நடாத்தத் திட்டமிட்டிருந்தது.



இருப்பினும், அறிக்கையை முடிக்க சட்ட நிபுணர்களுக்கு கூடுதலான அவகாசம் அளிக்கும் வகையில் காலக்கெடு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை (03) சூரிச் நகரிலுள்ள அமைப்பின் தலைமையகத்தில், சட்டப் பகுப்பாய்வில் எட்டப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முடிவுகளை பீபா (FIFA) கவுன்சில் ஏற்றுக் கொண்டது.



பாலஸ்தீன் எழுப்பிய குற்றத்தை விசாரிக்க அதன் ஒழுங்குக்குழு கட்டாயப்படுத்தப்படுமென்றும் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




Post a Comment

0 Comments