Ticker

6/recent/ticker-posts

டாடா குழுமத்தின் (TATA Group) முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மரணம்.

டாடா (TATA) குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று (10) தனது 86 வது வயதில் மரணமடைந்துள்ளார்.

புத்திசாதூர்யம், தொலைநோக்குப் பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றியவர்.

இவரது பதவிக் காலத்தில், டாட்டா (TATA) குழுமத்தின் வருவாய் பல மடங்கு அதிகரித்தது. 2011 முதல் 2012 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 100 பில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டது.

புகழ்பெற்ற டாடா (TATA) குடும்பத்தில் 1937 இல் பிறந்த ரத்தன் டாடா, 10 வயதில் தனது பெற்றோரை பிரிந்து தனது பாட்டியால் வளர்க்கப்பட்டார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியலில் பட்டம் பெற்றார்.

அத்துடன், ஹார்வர்ட் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்டில் பட்டம் பெற்றிருந்தாலும், ரத்தன் டாடா தனக்கு கிடைத்த IBM வேலை வாய்ப்பை நிராகரித்தார். 1962 முதல் டாட்டா குழுமத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றினார்.

இறுதியாக, 1971 இல் நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரானார். 1991 இல் ஜேஆர்டி (JRD) டாட்டாவிடம் இருந்து டாடா சன்ஸ் தலைவராகவும், டாட்டா அறக்கட்டளையின் தலைவராகவும் ரத்தன் டாட்டா அவர்கள் பொறுப்பேற்றார்.

இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாட்டா குழுமம் (TATA Group) பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. ரத்தன் டாடாவின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ் TATA Group அதன் உலகளாவிய தளத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது.

இது சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. இதனால், இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் ஏற்பட்டது. 2008 இல், இந்தியாவின் 02 வது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதை பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் 03 வது உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments