சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் - காசா போரின் போது அவர்கள் நடாத்திய போர்க் குற்றங்களுக்காகவே குறித்த பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
"போர்க் குற்றம், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றும் அவற்றை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிடியாணைகளைப் பிறப்பிக்க ICC வழக்கறிஞரின் கோரிக்கையின் சட்டப்பூர்வமான தன்மையை இஸ்ரேல் சவாலுக்குட்படுத்திய போதிலும், நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது.
இதேவேளை, ஹமாஸின் மூத்த அதிகாரி முகம்மது டெய்ஃப் என்பவருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH US (Whatsapp):
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments