வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமென்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார்.
வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி இதன் போது மேலும் கூறினார்.
மேலும், நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். தற்போதைய அரசாங்கமே அதிகபடியான அரச சேவையாளர்களின் ஆதரவினைப் பெற்ற அரசாங்கமாகும்.
அந்த வகையில், திருப்திகரமான அரச சேவைத்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
மேலும், ஆண்டு வரவு - செலவு திட்டத்தினூடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி இதன் போது சுட்டிக் காட்டினார்.
அத்துடன், வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விஷேட கொடுப்பனவு வழங்கப்படுமென்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
TO JOIN WITH US:
0 Comments