Ticker

6/recent/ticker-posts

மரத்திலிருந்து விழுந்து கிண்ணியாவைச் சேர்ந்த சிறுமி மரணம்.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயிலிடி கிராம சேவகர் பிரிவில், மரத்தில் ஏறிய சிறுமியொருவர் கீழே விழுந்து மரணமான சம்பவம் ஒன்று இன்று (30) பகல் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தி/வான்-எல புகாரி நகர் வித்யாலயத்தில் 06 ஆம் தரத்தில் கல்வி கற்று வருபவர் ஆவார்.

இச்சிறுமி, தனது வீட்டு முற்றத்திலுள்ள மாமரத்தில் ஏறி, மாங்காய் பறித்து கொண்டிருந்த போதே தவறி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீழே விழுந்ததையடுத்து பாராங்கல்லில் குறித்த சிறுமியின் தலை வேகமாக அடிபட்டு, உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TO JOIN WITH US (Whatsapp):

Post a Comment

0 Comments