உலக செஸ் சம்பியன்ஷிப் (World Chess Championship) போட்டித் தொடர் சிங்கப்பூரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று (26) ஆரம்பமானது. டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடக்கும் இப்போட்டி மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது.
வெற்றிக்கு ஒரு புள்ளியும், சமநிலைக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டும் போட்டியாளர் உலக சம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 14 சுற்று முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை முடிவு செய்வதற்கு டைபிரேக்கர் (Tie Breaker) கடைப்பிடிக்கப்படும்.
கிளாசிக்கல் முறையில் நடக்கும் இப்போட்டியில் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் உன்று ஒதுக்கப்படும். இது தவிர 40 வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும். 40 வது நகர்த்தலுக்கு முன்பாக சமநிலையில் முடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
0 Comments