Ticker

6/recent/ticker-posts

இனிமேல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை.

 எதிர்வரும் காலங்களில் தாம் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அவர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஏற்பட்ட பிளவு காரணமாகவே, கடந்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments