பாராளுமன்றத்திற்குள் ஒரு சுவாரஷ்யமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் போய் அமர்ந்துள்ளார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன்.
"இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம். எழும்புங்கள்!" என்று பணியாளர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு வைத்தியர் அர்ச்சுனா "அப்படி எங்கே எழுதியுள்ளது?" என்று கேட்டுள்ளார்.
"புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஆனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் போன்றோரின் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது. சம்பிரதாயம் உள்ளது" என்று பணியாளர் கூறியுள்ளனர்.
அதற்கு "சம்பிரதாயத்தை மாற்றத்தானேநான் வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்" வைத்தியர் அர்ஜுனா.
அநேகமாக இனிமேல் சபைக்குள் சரவெடிதான்.
நன்றி: சிவா ராமசாமி
TO JOIN WITH US (Whatsapp):
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments