உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொருட்டு கட்சித் தலைமைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என்று பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு முதலில் ஏற்பாடு செய்த போதிலும், நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் குறித்த தேர்தல் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
TO JOIN WITH US (Whatsapp):
https://chat.whatsapp.com/L5tcLftHbQd8LVsYrtGoD0
0 Comments