Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சுப் பதவிகள்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி முன்னிலையில் 21 பேருக்கு நேற்று (18) வழங்கி வைக்கப்பட்டன.

எனினும், வழங்கப்பட்ட அமைச்சரவை நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முஸ்லிம் தரப்பினரிடையே பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சரான் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் "இது முஸ்லிம்களையும் உள்வாங்கிய தேசிய அரசாங்கமாகும். முஸ்லிம்களுக்கு கடுகளவும் துரோகம் செய்ய மாட்டோம். அத்துடன் கொடுக்கப்பட வேண்டிய கெபினட் அமைச்சு இன்னும் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதே சமயத்தில், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான முனீர் முளஃபர் அவர்களுக்கும், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அக்ரம் இல்யாஸ் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments