Ticker

6/recent/ticker-posts

லங்கா IOC யின் எரிபொருள் விலையிலும் மாற்றம்

சிபெட்கோவின் புதிய விலைக்கேற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கு லங்கா IOC நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

9899)((4

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 309 ரூபா ஆகும்.

283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர்  ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 286 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 188 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதே வேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் விலையிலும், சுப்பர் டீசலின் விலையிலும் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை 371 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் தற்போதைய விலை 313 ரூபாவாகும்.

 TO JOIN WITH US (Whatsapp):

https://chat.whatsapp.com/L5tcLftHbQd8LVsYrtGoD0

Post a Comment

0 Comments