கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது 02 பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2022 டிசம்பர் 03 ஆம் திகதி இச்சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த சிலர் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளனர். ஹோட்டலில் இருந்தவர்கள் மீது குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்த வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கான்ஸ்டபில் பிரிட்ஜெட் மோர்லா என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக இந்த பாலியல் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments